/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : நவ 01, 2025 05:24 AM
ராசராச சோழன் விழா அரண் பணி அறக்கட்டளை சார்பில், திருமுறைகண்ட சோழன் மாமன்னர் ராசராசர் விழா, அவிநாசி ரோடு, நவஇந்தியா, இந்துஸ்தான் கல்லுாரி கலையரங்கில் காலை 9 மணிக்கு நடக்கிறது. திருவாடுதுறை ஆதினம் 24வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை வகிக்கிறார்.
நாட்டிய விழா பாரதீய வித்யா பவன் சார்பில், 24வது ஆடல் விழா, ஆர்.எஸ். புரம் பவன் வளாகத்தில் மாலை 6 மணிக்கு நடக்கிறது. 'தஞ்சை நால்வர்' என்ற தலைப்பில், பல்வேறு நடனங்களை நடனக்கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் அரங்கேற்றுகின்றனர்.
வுமன் நெட்வொர்க் கருத்தரங்கு இந்திய தொழில் கூட்டமைப்பு சி.ஐ.ஐ., மற்றும் இந்தியன் வுமன் நெட்வொர்க் சார்பில், 'ஆரோக்கியம் மற்றும் வளம்' என்ற தலைப்பில் இரண்டாவது பதிப்புக் கருத்தரங்கு ஹோட்டல் தாஜ் விவாந்தாவில், காலை 10 முதல் 11 மணி வரை நடக்கிறது. பெண் ஆளுமைகள் பலர் கலந்துகொள்கின்றனர்.
மணப்பெண் நகை கண்காட்சி வேகா ஜூவல்லரி சார்பில், மணப்பெண்களுக்கான தங்க நகைக்காட்சி, அவிநாசி ரோடு, தி ரெசிடன்சி டவர் ஹோட்டலில் நடக்கிறது. கலைநயமிக்க, நேர்த்தியான நகை தொகுப்புகளை கொண்ட நகைகளை காட்சிப்படுத்தியுள்ளது. தங்கம், வைரம், போல்கி நகை கலெக்சன் உள்ளது. காலை 10 மணி முதல் கண்காட்சியை பார்வையிடலாம்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு 7 முதல் 8:30 மணி வரை முகாம் நடக்கிறது.
பள்ளி விளையாட்டு விழா ரேஸ்கோர்ஸ் வி.சி.வி., சிஷு வித்யோதயா மெட் ரிக் பள்ளி ஆண்டு விளையாட்டு விழா, பள்ளி வளாகத்தில் காலை, 7:30 மணிக்கு நடக்கிறது. சுல்தான்பேட்டை வெங்கிட்ராஜ் பள்ளி இயக்குனர் அனுஷா, சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

