/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி பள்ளி மாணவிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்
/
மாநகராட்சி பள்ளி மாணவிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்
மாநகராட்சி பள்ளி மாணவிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்
மாநகராட்சி பள்ளி மாணவிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்
ADDED : நவ 01, 2025 11:32 PM

கோவை: ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற, 'பதில் சொல்; பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், மாணவிகள் தங்கள் அறிவு திறமையை வெளிப்படுத்தி, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்', இந்துஸ்தான் கல்விக்குழுமம் மற்றும் கோவை மாநகராட்சி சார்பில், வினாடி - வினா போட்டி நடத்தப்படுகிறது.
மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரின் தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் ஆர்வத்தை அதிகரிக்கவும், பொது அறிவு திறன்களை வளர்க்கவும் இப்போட்டி உதவுகிறது.
அதன்படி, ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண் கள் மேல்நிலைப்பள்ளியில் இந் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் சுற்றாக நடந்த எழுத்து தேர்வில், 50 மாணவிகள் பங்கேற்றனர். இரண்டாம் சுற்றுக்காக, எட்டு அணிகளில் இருந்து 16 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
'எப்' அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் கமலா நேத்ரா மற்றும் அல்பானா ஆகியோர் முதல் இடத்தை பெற்று வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
அதேபோல், 'இ' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீசக்திகா மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவி சாய் பரணிகா தேவி; 'ஜி' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவிகள் கணிகா மற்றும் லயாஸ்ரீ; 'எச்' அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் தனிஷிகா மற்றும் பூஷிதா; 'டி' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவிகள் அபீசா மற்றும் சஞ்சனா ஆகியோர் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் அருளானந்தன், சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

