/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஐ.எஸ்., தரம் விழிப்புணர்வு மராத்தான்; மாணவர்கள் ஆர்வம்
/
பி.ஐ.எஸ்., தரம் விழிப்புணர்வு மராத்தான்; மாணவர்கள் ஆர்வம்
பி.ஐ.எஸ்., தரம் விழிப்புணர்வு மராத்தான்; மாணவர்கள் ஆர்வம்
பி.ஐ.எஸ்., தரம் விழிப்புணர்வு மராத்தான்; மாணவர்கள் ஆர்வம்
ADDED : நவ 01, 2025 11:33 PM

கோவை: இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்.,) கோவை கிளை சார்பில், உலக தர நிர்ணய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தரம் குறித்த விழிப்புணர்வு மராத்தான் நேற்று நடந்தது.
ரேஸ்கோர்ஸ் மீடியா டவர் அருகே துவங்கிய மராத்தானில் மாணவர்கள், பொதுமக்கள், அரசு பணியாளர்கள் என, 700 பேர் பங்கேற்றனர்.
மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே மற்றும் பி.ஐ.எஸ்., கோவை கிளை மூத்த இயக்குனர் பவானி ஆகியோர், மராத்தானை கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
பொருட்களின் தரம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றை மையப்படுத்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், இந்த மராத்தான் நடந்தது.
மீடியா டவர் அருகே துவங்கி ரேஸ்கோர்ஸ் பகுதியில், 2.5 கி.மீ., சுற்றி மீண்டும் டவர் அருகே மராத்தான் முடிவடைந்தது. பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள், பதக்கம் பரிசாக வழங்கப்பட்டன.