/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீரமாச்சி அம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா
/
வீரமாச்சி அம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா
ADDED : நவ 01, 2025 11:33 PM
அன்னூர்: எல்லப்பாளையம், வீரமாச்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம், நாளை (3ம் தேதி) நடைபெறுகிறது.
எல்லப்பாளையத்தில், வீரமாச்சி அம்மன் கோவிலில், நந்திக்கு புதிதாக கற்கோயில் அமைத்து திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா கடந்த 31ம் தேதி துவங்கியது.
நேற்று காலை விநாயகர் வேள்வி பூஜையும், கோயிலில் இருந்து தீர்த்த குடங்கள் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், மாலையில் தெய்வத்திருமேனிகளை பீடத்தில் வைத்து, எண் வகை மருந்து சாற்றுதலும் நடக்கிறது.
நாளை காலை 9:45 மணிக்கு வீரமாச்சி அம்மன் மற்றும் விமானத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம், தச தரிசனம், அலங்கார பூஜை நடைபெறுகிறது.
காலை 11:00 மணிக்கு பஜனை நடைபெறுகிறது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவையாதினம் குமரகுருபர சுவாமிகள், பழனி சாது சண்முக அடிகள் ஆகியோர் அருளுரை வழங்குகின்றனர்.

