/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி
/
மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி
ADDED : டிச 11, 2025 05:11 AM

கோவை: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ், இந்துஸ்தான் கல்விக் குழுமம் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில் பங்கேற்ற சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, சங்கனூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் பொம்மணம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள், திறமைகளை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில் 50 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் 8 அணிகளாகப் பிரிந்து பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். 'எச்' அணியின் விக்னேஷ், பவிஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இவர்களுடன், 'டி' அணியின் கவுதம் பிரபாகரன், ஆதர்ஷ்; 'எப்' அணியின் ராமானுஜம், சுனில் குமார்; 'சி' அணியின் அகிலேஷ், மவுஷீத்; 'ஏ' அணியின் ஹன்ஷித், தியாகு ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு, தலைமையாசிரியர் பிரேமானந்த் சான்றிதழ்களை வழங்கினார்.
சங்கனூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இப்பள்ளியில் நடை பெற்ற தகுதி சுற்றில் 60 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் 8 அணிகளாகப் பிரிந்து பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். 'ஏ' அணியின் ஜெகதீஸ், பிரேம் குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுடன், 'எச்' அணியின் ஏஞ்சலின், கயல்விழி; 'ஜி' அணியின் இசை சக்திபிரியா, தக்ஷன்யா; 'டி' அணியின் மேகலாஷிதா, பிரனீதா; 'இ' அணியின் பூமிகா, சாலினி ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு,தலைமையாசிரியை மனோரஞ்சிதம் சான்றிதழ்களை வழங்கினார்.
ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில் 60 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் 8 அணிகளாகப் பிரிந்து பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். 'எச்' அணியின் சுப்புலட்சுமி, சஹானா பாணு ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இவர்களுடன், 'பி' அணியின் ஹாரிணி, ராஜா விக்னேஷ்; 'டி' அணியின் விஷ்ணு, மவுனிதா; 'இ' அணியின் ஜீவிஹாஷினி, ஹசீபா; 'ஜி' அணியின் ஸ்டீபன் ராஜ், கனிஷ்கா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு,தலைமையாசிரியை சீதாலட்சுமி சான்றிதழ்களை வழங்கினார்.
பொம்மணம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில், 60 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் 8 அணிகளாகப் பிரிந்து பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். 'டி' அணியின் நேத்ரா, காவியா ஷணா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இவர்களுடன், 'ஜி' அணியின் நகுல் ரத்திணம், விக்ரமாதித்தன்; 'எப்' அணியின் அஸ்வித்தா, பிரதிமா; 'சி' அணியின் ஸ்ரீதாரணி, மெனகா; 'இ' அணியின் சத்யஸ்ரீ, ஹேமாச்ரீ ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு, தலைமையாசிரியை பார்வதி சான்றிதழ்களை வழங்கினார்.

