/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராம ஊராட்சி செயலாளர்கள் சங்க விழிப்புணர்வு கூட்டம்
/
கிராம ஊராட்சி செயலாளர்கள் சங்க விழிப்புணர்வு கூட்டம்
கிராம ஊராட்சி செயலாளர்கள் சங்க விழிப்புணர்வு கூட்டம்
கிராம ஊராட்சி செயலாளர்கள் சங்க விழிப்புணர்வு கூட்டம்
ADDED : டிச 11, 2025 05:11 AM
பொள்ளாச்சி: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மாநில மையம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 19ம் தேதி கவன ஈர்ப்பு பேரணி சென்னையில் நடக்கிறது.
தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் விழிப்புணர்வு கூட்டம், பொள்ளாச்சியில் நடந்தது. மாநில தலைவர் சாஜூ தலைமை வகித்தார்.
கிராம ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும். ஊதியம் அரசு கருவூலம் வாயிலாக வழங்க வேண்டும்.
கிராம ஊராட்சியில், பணிபுரியும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு சிறப்பு காலம் வரை ஊதியம் வழங்க வேண்டும்.
இங்கு பணிபுரியும் துாய்மைக்காவலர்களுக்கு மாதச்சம்பளம், 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு, பதிவுரு எழுத்தருக்கு இணையான ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
துாய்மை பணியாளர்களுக்கு காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும்,முழு சுகாதார திட்டம், மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
கிராம ஊராட்சியில் பணியாற்றும் வரும் சுகாதார ஊக்குனர்களுக்கு மாத ஊதியம், 2 ஆயிரம் ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

