/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேராசிரியர் பணி எனக்கூறி ரூ.14.89 லட்சம் மோசடி
/
பேராசிரியர் பணி எனக்கூறி ரூ.14.89 லட்சம் மோசடி
ADDED : டிச 11, 2025 05:12 AM
கோவை: கோவை, ஆர்.எஸ்.புரம் ராமலிங்கம் ரோட்டை சேர்ந்தவர் உமாபதி, 54. இவரது மனைவி அனுசுயா. தம்பதிக்கு, கோவையை சேர்ந்த ஜெயம்மா என்பவர் பழக்கமானார்.
அவர், சென்னையில் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் அரசு கல்லுாரியில் வேலை வாங்கலாம் என, தெரிவித்தார்.
இதையடுத்து, அனுசுயாவுக்கு அரசு கல்லுாரியில் வேலை வாங்கித்தருமாறு உமாபதி, அவரிடம் தெரிவித்தார். தொடர்ந்து, அவருக்கு சென்னையை சேர்ந்த மார்கண்டன், சுரேஷ் ஆகியோர் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.
இருவரும் உமாபதியிடம், 14.89 லட்சம் ரூபாயை பெற்று மோசடி செய்தனர். உமாபதி புகாரின்படி, ஜெயம்மா, மார்கண்டன், சுரேஷ் ஆகிய மூவர் மீதும் கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

