/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சிப்பள்ளி ஆசிரியர் கலந்தாய்வு பணிகள் 'விறுவிறு'
/
மாநகராட்சிப்பள்ளி ஆசிரியர் கலந்தாய்வு பணிகள் 'விறுவிறு'
மாநகராட்சிப்பள்ளி ஆசிரியர் கலந்தாய்வு பணிகள் 'விறுவிறு'
மாநகராட்சிப்பள்ளி ஆசிரியர் கலந்தாய்வு பணிகள் 'விறுவிறு'
ADDED : ஜூலை 22, 2025 10:43 PM
கோவை; கோவை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்விற்கு ஆயத்தப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 83 ஆரம்பப்பள்ளிகள், 37 நடுநிலை, 11 உயர்நிலை மற்றும் 17 மேல்நிலை பள்ளிகள் உள்ளிட்டது என 148 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பணி மாறுதல் கலந்தாய்வை, மே - ஜூன் மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்திய நிலையில், பணிமாறுதல் விரும்பும் ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
கலந்தாய்விற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. நடைபெற இருக்கும் கலந்தாய்வில், இரண்டு ஆண்டுகளுக்கு மேல், அயல்பணியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு, முன்னுரிமை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
மாநகராட்சி கல்வி அலுவலர் தாம்ப்சன் கூறுகையில், ''தற்போது வரை 115 ஆசிரியர்களிடமிருந்து பணி மாறுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆரம்பப்பள்ளி, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களிடமிருந்து, அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன. மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன,'' என்றார்.