/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுக்கடைகளை அகற்ற வேண்டும்: மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம்
/
மதுக்கடைகளை அகற்ற வேண்டும்: மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம்
மதுக்கடைகளை அகற்ற வேண்டும்: மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம்
மதுக்கடைகளை அகற்ற வேண்டும்: மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம்
ADDED : ஜூலை 22, 2025 10:43 PM
கோவை; அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின், 7வது ஒன்றிய மாநாடு, பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள ஜெயந்தி திருமண மண்டபத்தில்நடந்தது. மாதர்சங்கத்தின் அகில இந்திய துணை செயலாளர் சுகந்தி தலைமை வகித்தார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழக ரேஷன் விநியோகத்தில் உள்ள குளறுபடிகளை, சரிப் படுத்த வேண்டும். மக்கள் வசிக்கும் பகுதியில், இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை அகற்ற வேண்டும்.
சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய தலைவராக பிரேமலதா, செயலாளராக புஸ்பலதா, பொருளாளராக ரேவதி, துணை செயலாளராக சந்திரகலா, துணைத்தலைவராக சுசீலா மற்றும் ஆறு கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, சி.ஐ.டி.யு., பொதுச்செயலாளர் சிவராஜன், ஜீவாமணி, காந்திமதி மற்றும் 100க்கும் மேற்பட்ட மாதர் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.