/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மே மாதத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வு கட்டாயம் வேண்டும்
/
மே மாதத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வு கட்டாயம் வேண்டும்
மே மாதத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வு கட்டாயம் வேண்டும்
மே மாதத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வு கட்டாயம் வேண்டும்
ADDED : மே 09, 2025 11:58 PM
கோவை: மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், அலகு விட்டு அலகு பொது மாறுதல் கலந்தாய்வை விரைவில் நடத்த, தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண் 176 படி, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், பல ஆண்டுகளாக பணியிட மாறுதல் பெற முடியாமல் இருந்த சென்னை, மதுரை மற்றும் கோவை மாநகராட்சி பள்ளிகளில், பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பணி மாறுதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போதைய கல்வியாண்டில் அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு எமிஸ்  தளத்தின் மூலம் நடைபெறவில்லை. இதனால், கோவை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், மே மாத விடுமுறைக்குள் முதலில் அலகு மாற்ற கலந்தாய்வை நடத்தி, பின்னர் பொது கலந்தாய்வை நடத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்மூலம், 2025-2026 கல்வியாண்டு தொடங்கும் போதே, ஆசிரியர்கள் புதிய பள்ளிகளில் பணியேற்க முடியும். தற்போது நடைமுறையில் உள்ள, முன்னுரிமை வட்டார அடிப்படையைத் தவிர, காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும், எமிஸ் தளத்தில் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும், பதவி உயர்வுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர, மற்ற பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

