/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பில்லுார் குழாய் கசிவு நீக்க ரூ.4.90 கோடி அரசுக்கு கருத்துரு அனுப்புது மாநகராட்சி
/
பில்லுார் குழாய் கசிவு நீக்க ரூ.4.90 கோடி அரசுக்கு கருத்துரு அனுப்புது மாநகராட்சி
பில்லுார் குழாய் கசிவு நீக்க ரூ.4.90 கோடி அரசுக்கு கருத்துரு அனுப்புது மாநகராட்சி
பில்லுார் குழாய் கசிவு நீக்க ரூ.4.90 கோடி அரசுக்கு கருத்துரு அனுப்புது மாநகராட்சி
ADDED : ஜன 04, 2025 10:58 PM
கோவை: பில்லுார் அணையில் உள்ள நீரேற்று நிலையம், வெள்ளியங்காட்டில் உள்ள சுத்திகரிப்பு நிலையம் பராமரிப்பு மற்றும் பிரதான குழாயில் ஏற்படும் கசிவுகளை சரி செய்ய, 4.90 கோடி ரூபாய்க்கு மாநகராட்சி கருத்துரு தயாரித்திருக்கிறது.
கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, சிறுவாணி மற்றும் பில்லுார் அணைகள், ஆழியாறு மற்றும் பவானி ஆற்றுப் பகுதியில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்படுகிறது.
பில்லுார்-2வது திட்டத்தில் நாளொன்றுக்கு, 1.25 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதற்காக, பில்லுார் அணையின் கரைப்பகுதியில், 375 எச்.பி., திறனுள்ள நான்கு மின் மோட்டார், இரண்டு பதிலி மோட்டார்கள் நிறுவப்பட்டுள்ளன.
வெள்ளியங்காட்டில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு, 5.17 கி.மீ., துாரத்துக்கு குகை மூலம், 1,500 மி.மீ., விட்டமுள்ள குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. சுத்திகரிக்கப்படும் குடிநீர், 555 எச்.பி., திறனுள்ள நான்கு மின் மோட்டார், இரண்டு பதிலி மோட்டார், 150 எச்.பி., மோட்டார் மூலம் நீரேற்றம் செய்யப்படுகிறது.
அங்கிருந்து, கட்டன்மலையில் உள்ள குகையை தண்ணீர் வந்தடைகிறது. பின், 23.37 கி.மீ., துாரமுள்ள கணபதி ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள, மாநகராட்சி தொட்டிக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து, வார்டு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தொட்டிகளுக்கு நீரேற்றப்பட்டு, மக்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
தொழில்நுட்ப பணியாளர்கள், களப்பணியாளர்கள் நியமனம், தேவையான உபகரணங்கள், வேதிப்பொருட்கள், மின் மோட்டார் பழுது நீக்குதல், பிரதான குழாயில் ஏற்படும் கசிவுகளை நீக்குவது, நீரேற்று நிலையம் மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்கி, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, 4.90 கோடி ரூபாய்க்கு மாநகராட்சி மதிப்பீடு தயாரித்திருக்கிறது.

