/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அண்ணா மார்க்கெட் கடைகளுக்கு வாடகையை குறைத்த மாநகராட்சி
/
அண்ணா மார்க்கெட் கடைகளுக்கு வாடகையை குறைத்த மாநகராட்சி
அண்ணா மார்க்கெட் கடைகளுக்கு வாடகையை குறைத்த மாநகராட்சி
அண்ணா மார்க்கெட் கடைகளுக்கு வாடகையை குறைத்த மாநகராட்சி
ADDED : பிப் 10, 2025 11:35 PM
கோவை; கோவை, மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள அண்ணா தினசரி மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கையை பரிசீலித்து, வாடகையை மாநகராட்சி குறைத்துளளது.
கோவை மாநகராட்சி, 69வது வார்டு, மேட்டுப்பாளையம் ரோட்டில் அண்ணா தினசரி மார்க்கெட் செயல்படுகிறது. அங்கிருந்த தரைக்கடைகள் மற்றும் மேடை கடைகள் இடிக்கப்பட்டு, புதியதாக, 476 கடைகள் கட்டப்படுகின்றன.  மொத்த மார்க்கெட்டையும் குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டது. ஏலத்தொகையாக மூன்று கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது, தின வாடகையாக ரூ.300, குப்பை கட்டணமாக ரூ.25 நிர்ணயிக்கப்பட்டது. ஒரு மாதத்துக்கு மட்டும் வாடகையாக ரூ.9,000 மற்றும் குப்பை கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதையறிந்த மார்க்கெட் வியாபாரிகள்  குடும்பத்தினருடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோரை சந்தித்து முறையிட்டனர். தினசரி வாடகையை, 100 ரூபாயாக குறைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இதை பரிசீலித்த மாநகராட்சி நிர்வாகம், புதிய மேடை கடை ஒன்றுக்கு தினமும் ரூ.150 வாடகை, குப்பை அகற்ற ரூ.10, உபயோகத்துக்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிப்பதென, மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏலத்தொகை மூன்று கோடி ரூபாயில் இருந்து இரண்டு கோடி ரூபாயாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இனி, மார்க்கெட் வளாகம் மொத்தமாக ஏலமிடப்படும். ஏலம் எடுப்பவர்கள், தற்போது கடை வைத்திருப்போரிடம் தின வாடகையை வசூலித்துக் கொள்ள வேண்டும். மாநகராட்சிக்கு ஏலத்தொகையை செலுத்த வேண்டுமென, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

