ADDED : செப் 20, 2026 10:44 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்க செயலாளர் வேலு உள்ளிட்ட நிர்வாகிகள், தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:
ஊழல் அதிகாரிகளை அரசு அடையாளம் காண வேண்டும். அரசியலமைப்பு சட்டம் எவ்வித கருணையுமின்றி, பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று சொல்கிறது.
அரசியல் குறுக்கீடுகள் ஏதுமின்றி, எந்த ஒரு ஊழல் புகாரையும் விசாரணைக்குட்படுத்தி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அதற்கு லஞ்ச ஒழிப்பு, ஊழல் மற்றும் கண்காணிப்பு துறைக்கு சுதந்திரமும், அதிகாரமும் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
