கொலை முயற்சியில் 5 ஆண்டாக தலைமறைவாக இருந்தவர் கைது
கொலை முயற்சியில் 5 ஆண்டாக தலைமறைவாக இருந்தவர் கைது
ADDED : செப் 20, 2026 10:44 PM
தொண்டாமுத்தூர்: வடவள்ளி, நவாவூரை சேர்ந்தவர் பாலமுரளி, 41. இவர் 2016ம் ஆண்டு, பரமேஸ்வரன்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு காரில் சென்று கொண்டிருக்கும்போது, மூன்று பேர் கொண்ட கும்பல் வழிமறித்து மண்வெட்டி, கத்தியால் தாக்கி கொல்ல முயன்றது. கார் மற்றும் காரில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த சபரிராஜ், 36, காளி என்கிற வெள்ளைக்காளி, மதிரி என்கிற முத்து ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதன்பின், ஜாமினில் வெளியே வந்தனர். மதுரையில் வேறு வழக்கில் காளி மற்றும் மதிரி ஆகியோர் கைது செய்யப்பட்டு, தற்போதும் சிறையில் உள்ளனர். ஆனால் சபரிராஜ் 2021 முதல் இவ்வழக்கிற்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
மதுரையில் தலைமறைவாக இருந்த சபரிராஜை, போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
