/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எப்., அலுவலகத்தில் ஊழல் விழிப்புணர்வு வாரம்
/
பி.எப்., அலுவலகத்தில் ஊழல் விழிப்புணர்வு வாரம்
ADDED : நவ 01, 2024 10:37 PM
கோவை; கோவை பி.எப்., மண்டல அலுவகத்தில் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, கோவை மண்டல வருங்கால வைப்புநிதி கமிஷனர் வைபவ்சிங் கூறியிருப்பதாவது:
கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள பி.எப்.,மண்டல அலுவலகத்தில் கடந்த, 28 ம் தேதி துவங்கிய இந்த நிகழ்ச்சியில் அனைத்து பணியாளர்களும் உறுதிமொழி ஏற்றனர்.
டில்லி தலைமைச் அலுவலகம், மத்திய வருங்கால வைப்பு நிதி கமிஷனர் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்க, அனைத்து நிலைகளிலும் நேர்மையைக் கடைப்பிடிப்பதற்கான உறுதிமொழியை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர். மேலும் நேர்மை மற்றும் ஒருமைப்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பணியாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் சிறந்த குடிமகனாக விளங்குவதற்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் அதன் அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட உறுதிபூண்டுள்ளது. பங்குதாரர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் இபிஎப்ஓ வின் இணையதளத்தில் சந்தாதாரர்கள் பார்வையிடலாம்.
இணையதளம் வழியாக மின்னணு புகார்கள் பெறுவதற்கு அவற்றை நிவர்த்தி செய்யவதற்கு வசதி செய்யப்பட்டிருந்தாலும், கோவைவட்டார அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியிலும் ஊழல் சம்பந்தமான புகார்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

