/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில் கண்காட்சி மையம் அமைக்க முதல்வரிடம் கொசிமா வலியுறுத்தல்
/
தொழில் கண்காட்சி மையம் அமைக்க முதல்வரிடம் கொசிமா வலியுறுத்தல்
தொழில் கண்காட்சி மையம் அமைக்க முதல்வரிடம் கொசிமா வலியுறுத்தல்
தொழில் கண்காட்சி மையம் அமைக்க முதல்வரிடம் கொசிமா வலியுறுத்தல்
ADDED : நவ 06, 2024 11:44 PM
கோவை; கோவை சிட்கோவில் செயல்பட்டு வந்த டான்சியின் மூலப்பொருள் கிடங்கில் தொழில் கண்காட்சி மையம் அமைத்து தர வேண்டும் என, கொசிமா சார்பில் வலியுறுத்தப்பட்டது.
கோவை வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினை கொசிமா பிரதிநிதிகள் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.மனுவில், சிட்கோவில் அடுக்குமாடி தொழில்கூடங்களுக்கு நிதி ஒதுக்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். சிட்கோவில் செயல்பட்டு வந்த டான்சி அமைப்பின் மூலப்பொருள் கிடங்கு பராமரிப்பின்றி உள்ளது. அந்நிலத்தில் தொழில் கண்காட்சி மையம் அமைத்து கொடுத்து அப்பகுதி வளர்ச்சிக்கு உதவ வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.