ADDED : மார் 11, 2026 06:00 AM

அன்னுார்: அன்னுார் அருகே தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமானது.
அன்னுார் அருகே பொன்னே கவுண்டன் புதூரில், தனியார் நிறுவனத்தாருக்கு, சொந்தமான கழிவு பஞ்சு குடோன் உள்ளது.
இந்த குடோனில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள் வைக்கப்பட்டு இருந்தன. நேற்று மதியம் 2:30 மணியளவில் திடீரென அதில் தீ பிடித்தது. தீ மள மளவென பரவியது. இதையடுத்து அன்னுார் மற்றும் கருமத்தம்பட்டியில் இருந்து இரண்டு தீயணைப்பு நிலைய வாகனங்களில் வந்த வீரர்களும், தனியார் தண்ணீர் லாரிகளும் தீயை அணைக்க போராடின. பல மணி நேரம் போராடியும் ஒரு பகுதி தீயை மட்டுமே அணைக்க முடிந்தது. பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி பஞ்சு மூட்டைகளை அப்புறப் படுத்தினர்,
தீயணைப்பு வீரர்களுடன், பொதுமக்களும், தீயை அணைக்க போராடினர். எனினும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து அன்னுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
