ADDED : மார் 16, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
அன்னுார்: அன்னுாரில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள் எரிந்து கருகின.
அன்னுாரில், அவிநாசி சாலையில், சோமனுார் பிரிவில் ஓ.இ., மில் செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் மில்லின் பின்புறம் இருந்த காய்ந்த புற்களில் தீப்பிடித்து, மில்லுக்குள்ளும் தீ பரவியது. இதில் மில் குடோனில் வைக்கப்பட்டிருந்த கழிவுபஞ்சு மூட்டைகள் தீப்பிடித்தன.
அன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரன் தலைமையில் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும், பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் கருகின. அன்னுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
