/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழகத்தில் இந்திய பருத்திக் கழக கிளை தேவை; மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு வலியுறுத்தல்
/
தமிழகத்தில் இந்திய பருத்திக் கழக கிளை தேவை; மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு வலியுறுத்தல்
தமிழகத்தில் இந்திய பருத்திக் கழக கிளை தேவை; மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு வலியுறுத்தல்
தமிழகத்தில் இந்திய பருத்திக் கழக கிளை தேவை; மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு வலியுறுத்தல்
ADDED : செப் 27, 2025 12:46 AM
கோவை; இந்திய பருத்திக் கழகத்தின் கிளையை கோவையில் அமைக்க, மறு சுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பு (ஆர்.டி.எப்.,) வலியுறுத்தியுள்ளது.
ஆர்.டி.எப்., வருடாந்திர பொதுக்குழு கூட்டம், தலைவர் ஜெயபால் தலைமையில் நடந்தது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழக நுாற்பாலைகளுக்கு ஆண்டுக்கு 110 லட்சம் பேல் பருத்தி தேவை. தமிழகத்தில் 5 லட்சம் பேல் கூட விளைவதில்லை. ஜி.எஸ்.டி., அமலாக்கத்துக்குபின், பருத்தி கொள்முதல் செய்யும் மாநிலத்துக்கு 2.5 சதவீத வரியும், மத்திய அரசுக்கு 2.5 சதவீத வரியும் செலுத்துகிறோம். இதனால், தமிழக அரசுக்கு, மொத்த நுாற்பாலையின் தேவையில் 98 சதவீதம் எந்த வரி வருமானமும் பருத்தி வாயிலாக கிடைப்பதில்லை. ஆண்டுக்கு ரூ.900 கோடி வரி இழப்பு ஏற்படுகிறது.
வட இந்தியாவில் இருந்து பருத்தி கொண்டு வர போக்குவரத்து செலவாக ஆண்டுக்கு ரூ.1,000 கோடி கூடுதலாக செலவு செய்கின்றன. மாநில அரசுக்கும் இழப்பு, தமிழக நுாற்பாலைகளுக்கும் நிதியிழப்பு ஏற்படுகிறது. இதனால், தமிழக ஜவுளித்துறையினர் சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தையில் போட்டியிட முடியாமல் பின்தங்குகிறோம்.
மாநில அரசு, பருத்தி விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூ.5,000 மானியம், தரமான விதைகள், உரங்கள், ஆலோசனை வழங்கினால், அரசுக்கு அதிகபட்சம் ரூ.700 கோடி செலவாகும்.
தமிழகம் பருத்தி விளைச்சலில் தன்னிறைவு பெறுவதுடன், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். ஏற்றுமதியால் அன்னிய செலாவணி ஈட்டலாம்.
இந்திய பருத்தி நுகர்வில் 47 சதவீதத்தை தமிழகம் நுகர்கிறது. ஆனால், இந்திய பருத்திக் கழகத்தின் கிளை, தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் கிளை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழில்துறையின் மற்றொரு மிக முக்கிய பிரச்னை. மின் கட்டணம். பீக் ஹவர் கட்டணம், நிலைக்கட்டணம், மேற்கூரை சோலாருக்கு நெட்வொர்க் கட்டணம் என, தாங்க முடியாத சுமையை தொழில்துறை எதிர்கொண்டுள்ளது. மாநில அரசு இப்பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.