sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பஞ்சு விலை குறைந்தது; கழிவுப் பஞ்சு விலை உயர்ந்தது மறுசுழற்சி ஜவுளித் துறையினர் தவிப்பு

/

பஞ்சு விலை குறைந்தது; கழிவுப் பஞ்சு விலை உயர்ந்தது மறுசுழற்சி ஜவுளித் துறையினர் தவிப்பு

பஞ்சு விலை குறைந்தது; கழிவுப் பஞ்சு விலை உயர்ந்தது மறுசுழற்சி ஜவுளித் துறையினர் தவிப்பு

பஞ்சு விலை குறைந்தது; கழிவுப் பஞ்சு விலை உயர்ந்தது மறுசுழற்சி ஜவுளித் துறையினர் தவிப்பு


ADDED : நவ 11, 2025 01:07 AM

Google News

ADDED : நவ 11, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பஞ்சு விலை குறைந்தாலும், நூல் மில்கள் கழிவுப் பஞ்சு விலையை உயர்த்தியுள்ளதால், விலை உயர்வைச் சமாளிக்க முடியாமல் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக, மறுசுழற்சி ஜவுளித்துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 8.5 லட்சம் ரோட்டர் திறனில் 500க்கும் மேற்பட்ட மறுசுழற்சி முறையில் நூல் உற்பத்தி செய்யும் ஓப்பன் எண்ட் (ஓ.இ.,) மில்கள் உள்ளன. இவற்றில், 200 ஓ.இ., மில்கள், ஸ்பின்னிங் மில்களில் இருந்து வெளியேறும் கழிவுப் பஞ்சுகளைக் கொண்டும், 300 ஓ.இ., மில்கள் ஆயத்த ஆடை நிறுவன பனியன் கட்டிங் வேஸ்ட்களை மறுசுழற்சி செய்து, 2 முதல் 40 கவுன்ட் வரையிலான நூல்களை உற்பத்தி செய்கின்றன.

ஓ.இ., மில்களுக்கான மூலப்பொருளான ஸ்பின்னிங் மில்களில் இருந்து வெளியேறும் கழிவுப் பஞ்சு விலை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சமீப காலமாக, தமிழக ஸ்பின்னிங் மில்கள், கழிவுப் பஞ்சுக்கு வட இந்திய நூற்பாலைகளை விட, கிலோவுக்கு 10 முதல் ரூ.15 வரை கூடுதலாக விலை வைத்து விற்கின்றனர். இதனால், ஓ.இ., மில்கள் நெருக்கடியைச் சந்தித்துள்ளன.

கழிவு பஞ்சுக்கு அதிக விலை மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பு தலைவர் ஜெயபால் கூறியதாவது:

கடந்த மாதம், பருத்தி சீசன் துவங்கியதால், ஆர்.டி, 75 தரம் கொண்ட பஞ்சு விலை ஒரு கேண்டி ரூ. 56 ஆயிரத்தில் இருந்து, ரூ. 50 ஆயிரமாகக் குறைந்துள்ளது. பருத்திப் பஞ்சு விலை குறைந்ததால், வட இந்திய நூற்பாலைகள் நூல் விலையைக் குறைத்தன.

இதனால், தமிழக ஸ்பின்னிங் மில்களும், நூல் விலையை கணிசமாகக் குறைத்தனர். ஆனால், பருத்தியில் இருந்து வெளியேறும் கழிவுப் பஞ்சின் விலையை குறைக்காமல், கிலோவுக்கு ரூ. 8 வரை உயர்த்தி விட்டன.

என்.டி.சி., உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் நூற்பாலைகள் செயல்பட்டு வந்த வரை, டெண்டர் அறிவித்து, கழிவுப் பஞ்சை விற்பனை செய்து வந்தனர். அதற்கேற்ப, தனியார் நூற்பாலைகளிலும் விலை நிர்ணயிக்கப்பட்டது. கொரோனாவுக்குப் பின், என்.டி.சி.,ஆலைகள் திறக்கப்படாததால், தனியார் மில்கள் டெண்டரே விடாமல், சிண்டிகேட் அமைத்து, தன்னிச்சையாக வடமாநிலங்களை விட, கழிவுப் பஞ்சை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றன.

தமிழக ஸ்பின்னிங் மில்கள் கடந்த 30 நாட்களில் ஓ.இ., மில்களின் மூலப்பொருள் விலையை கிலோவுக்கு ரூ.8 வரை உயர்த்தியுள்ளன. இதனால், தமிழக ஓ.இ., மில்கள், தொழிலை நடத்த முடியாத நிலை உள்ளது.

பேக்கிங் கட்டணம் வட இந்திய மில்கள் கழிவுப் பஞ்சுக்கு பேக்கிங் கட்டணம் விதிப்பதில்லை. தமிழகத்தில் கிலோவுக்கு ரூ. 1 முதல் ரூ.1.50 வரை கட்டணம் வசூலிக்கின்றனர். ஓ.இ., மில்களைக் காப்பாற்ற, அரசு தலையிட வேண்டும்.

கழிவுப் பஞ்சு விலையை, டெண்டர் வாயிலாக நிர்ணயிக்க வேண்டும். கழிவுப்பஞ்சுக்கான முழு மதிப்புக்கு பில் கொடுக்க வேண்டும். தமிழக நெசவாளர்களுக்கு நூலை வழங்கி வரும் ஓ.இ., மில்களையும், சங்கிலி தொடரில் உள்ள தொழில் முனைவோர்களையும், நம்பி உள்ள இரண்டரை லட்சம் தொழிலாளர்களையும் பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

விலை ஒப்பீடு

ஜெயபால் மேலும் கூறுகையில், “பருத்தி சீசன் துவங்கும் முன் கேண்டி விலை ரூ.56 ஆயிரம்; கழிவுப்பஞ்சு ரூ.102. பருத்தி விலையில் 66 சதவீதம். நவ.ல் பருத்தி விலை ரூ.51500 எனக். ஆனால், கழிவுப் பஞ்சு விலை ரூ.108. இது பருத்தி விலையில் 75 சதவீதம்,” என்றார்.








      Dinamalar
      Follow us