/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தலைமை பொறுப்பில் இருப்போர் திறமைகளை வளர்க்க வேண்டும்'
/
'தலைமை பொறுப்பில் இருப்போர் திறமைகளை வளர்க்க வேண்டும்'
'தலைமை பொறுப்பில் இருப்போர் திறமைகளை வளர்க்க வேண்டும்'
'தலைமை பொறுப்பில் இருப்போர் திறமைகளை வளர்க்க வேண்டும்'
ADDED : நவ 11, 2025 01:07 AM

கோவை: அவர் ஆல் இந்தியா மேனேஜ்மென்ட் அசோசியேஷன்(அய்மா), கோவை மேனேஜ்மென்ட் அசோசியேஷன்(சி.எம்.ஏ.,) மற்றும் ஜி.ஆர்.ஜி., ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் சார்பில், 'புவி சார் அரசியல், தொழில்நுட்ப இடையூறுகள் காலங்களில் தலைமைத்துவம்' கருத்தரங்கு நேற்று நடந்தது.
பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லுாரியில் நடந்த கருத்தரங்கில், டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் நரேந்திரன் பேசுகையில், ''பல நாடுகளில் ஏழை, பணக்காரர்கள் ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது. 1875 முதல் 1950ம் ஆண்டு வரை ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்கள் அடுத்த, 75 ஆண்டுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்களை விட அதிகமாகவே இருந்துள்ளன.
தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், தொடர்ந்து தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பொருளாதார, தொழில்நுட்ப கலாசார ரீதியாகவும் சவால்களை எதிர்கொள்ள தயாராக வேண்டும்,'' என்றார்.
சி.எம்.ஏ., தலைவர் நித்யானந்தன் வரவேற்றார். ஜி.ஆர்.ஜி., ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் கல்லுாரி இயக்குனர் சதாசிவம், சி.எம்.ஏ., செயலாளர் புனீத் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

