/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரமடை வாரச்சந்தையில் கூடுதல் கட்டணம் வசூல்; அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் சரமாரி புகார்
/
காரமடை வாரச்சந்தையில் கூடுதல் கட்டணம் வசூல்; அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் சரமாரி புகார்
காரமடை வாரச்சந்தையில் கூடுதல் கட்டணம் வசூல்; அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் சரமாரி புகார்
காரமடை வாரச்சந்தையில் கூடுதல் கட்டணம் வசூல்; அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் சரமாரி புகார்
ADDED : ஏப் 04, 2025 11:37 PM

மேட்டுப்பாளையம்; காரமடை வாரச்சந்தையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக, நகராட்சி கூட்டத்தில் அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் சரமாரி புகார் தெரிவித்தனர். இதில் அ.தி.மு.க., கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார்.
கோவை மாவட்டம் காரமடை நகராட்சியில் அவசர கூட்டம் நகராட்சி தலைவர் உஷா தலைமையில், நகராட்சி கமிஷனர் மதுமதி முன்னிலையில் நடைபெற்றது. இதில் காரமடை தினசரி மற்றும் வாரச் சந்தையில் சுங்கம் வரி டெண்டர் தொடர்பான தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.
அப்போது கவுன்சிலர்கள் சரமாரியாக புகார் கூறினார்கள்.
விக்னேஷ் (பா.ஜ.,)-: நகராட்சி நிர்வாகமே சுங்கம் வரியை அதிகம் வசூல் செய்கிறது. அதிகாரப்பூர்வமாக டோக்கன் எதுவும் கொடுக்காமல் வசூல் பணி நடக்கிறது. பிக் அப் வேன் ஒன்றுக்கு ரூ.200 வசூல் செய்கிறார்கள். டெண்டர் தொடர்பான தீர்மானத்தில் ரூ.10, ரூ.20, ரூ.50 என வாகனங்களுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ரூ.100க்கு மேல் வசூல் நடக்கிறது. அதிகாரிகள் இஷ்டம் போல் செயல்படுகிறார்கள்.
நகராட்சி கமிஷனர் மதுமதி:- சுங்கம் வசூல் செய்வது தொடர்பாக, அதிக கட்டணம் வசூல் செய்திருந்தால், விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
வனிதா (அ.தி.மு.க):- நகராட்சி நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. அதிகாரிகள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால் அதனை நகராட்சி தலைவரும், கமிஷனரும் கண்டு கொள்வது இல்லை.
அதிகாரிகள் ஆட்டம் அதிகம் உள்ளது. எதிர்க்கட்சி என்பதால் எனது வார்டு திட்டமிட்டே புறக்கணிப்பு செய்யப்படுகிறது. இதனால் வெளிநடப்பு செய்கிறேன்.
தியாகராஜன் (தி.மு.க.,):- காரமடை நகராட்சியில் ஊழல் நடக்கிறது. தமிழக முதல்வரிடம் புகார் மனு அளிக்க போகிறோம். டோக்கன் இன்றி வசூல் செய்யப்படும் பணம் யாருக்கு போகிறது.
அமுதவேணி (தி.மு.க.,)-:கூட்டத்தின் விதிகளை மீறி, கவுன்சிலர்களின் உரிமையை பறிக்கும் வகையில், அதிகாரிகளே எல்லாவற்றையும் செய்வதால், கவுன்சிலர்கள் நாங்கள் எதற்கு இருக்கிறோம். சும்மா கூட்டத்திற்கு வந்து டீ குடிக்கவா, கையெழுத்து போடவா.
இந்த வாக்குவாதத்தின்போது, கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு அதிகாரிகளால் சரியாக பதில் அளிக்க முடியாமல் திணறினர்.------

