/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமுகையில் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
/
சிறுமுகையில் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
ADDED : நவ 01, 2025 05:22 AM

மேட்டுப்பாளையம்: அம்ருத் திட்டத்தை சிறுமுகை பேரூராட்சி அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை என கூறி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க., மற்றும் பா.ஜ. கவுன்சிலர்கள் அலுவலக முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் வாயிலாக ரூ.19 கோடியே 90 லட்சம் மதிப்பில் 4 இடங்களில் குடி தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் இந்த திட்டம், முறையாக திட்டமிடல் இல்லாமல் குடிநீர் வால்வுகள் அமைக்கப்பட்டதில் குளறுபடி உள்ளது. இதனால் தண்ணீர் வீணாகி வருகிறது, திட்டத்தின் நோக்கம் நிறைவேறவில்லை என கண்டித்து முழுமையாக வால்வுகள் அமைக்கும் வரை, சோதனை ஓட்டம் நடத்த கூடாது என கூறி பா.ஜ., பேரூராட்சி கவுன்சிலர் அமுதா மற்றும் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் குமார், சுந்தரி, சூரியபிரகாஷ், சாந்தி உள்ளிட்டோர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் பேரூராட்சி செயல் அலுவலர், அம்ருத் திட்ட அலுவலர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். 15 நாட்களுக்குள் பிரச்னை சரி செய்யப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.-----

