/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கார் டிரைவர் கொலை: தி.மு.க., பிரமுகர் சிக்கினார்
/
கார் டிரைவர் கொலை: தி.மு.க., பிரமுகர் சிக்கினார்
ADDED : நவ 01, 2025 05:22 AM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தை சேர்ந்தவர் அலாவுதீன், 36. கார் டிரைவர். இவர் காணாமல் போனதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் அவரது மனைவி சுமையா புகார் அளித்தார். விசாரணையில், அலாவுதீன் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்தது. இது தொடர்பாக காரமடை தி.மு.க.,பிரமுகர் மற்றும் அவரது இரு மகன்களிடம் மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
கடந்த 27ம் தேதி அலாவுதீனுக்கு வேண்டப்பட்ட பெயிண்டர்கள் இருவரை ஒரு வழக்கில் கைது செய்தோம். அவர்கள் அலவுதீனை சிலர் கொன்றுவிட்டார்கள் என கூறினார்கள். இதன் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தினோம். அப்போது அலவுதீனை கடைசியாக போனில் அழைத்தது காரமடை தி.மு.க., பிரமுகர் வீட்டில் இருந்து தான் என தெரியவந்தது. அலாவுதீன் அவர் வீட்டிற்கு சென்ற போது, அங்கு ஏற்பட்ட தகராறில் அலாவுதீனை தி.மு.க., பிரமுகர் மற்றும் அவரது இரு மகன்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி கொலை செய்தது தெரிய வந்தது.
மேலும், வீட்டிற்கு அருகில் அவரைக் கொன்ற பிறகு, மாதேஸ்வரன் மலைக்குப் பின்னால் உள்ள காட்டுப் பகுதிக்கு உடலை எடுத்துச் சென்று, பெட்ரோல் ஊற்றி, ஆதாரங்களை அழிக்க தீ வைத்ததாக தெரிகிறது.
அவர்களின் தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அலாவுதீனின் எலும்புத் துண்டுகளை மீட்டோம். அவை தடயவியல் நிபுணர்களால் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. மூன்று பேரும் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.--

