/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பணம் வைத்து சூதாடியதாக கவுன்சிலர் கணவருக்கு வலை
/
பணம் வைத்து சூதாடியதாக கவுன்சிலர் கணவருக்கு வலை
ADDED : ஜன 25, 2024 01:24 AM
கோவை:கோவை கணபதி ராஜா வீதியைச் சேர்ந்தவர் அசோக்குமார், 42. அப்பகுதியில் ஒர்க் ஷாப் நடத்துகிறார். இவரது வீட்டில் பணம் வைத்து சீட்டாடுவதாக, சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் அசோக்குமாரின் வீட்டில் சோதனை நடத்தினர்.
சோதனையில், பீளமேட்டை சேர்ந்த கீர்த்தி, 32, கணபதியை சேர்ந்த செந்தில்குமார், 40, உள்ளிட்ட ஆறு பேர் சீட்டு விளையாடியது தெரிந்தது. போலீசார் கைது செய்ய முயன்றபோது, கணபதியை சேர்ந்த செந்தில்குமார் தப்பினார்.
போலீசார் மற்ற ஐந்து பேரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 12.04 லட்சம் ரூபாய், மொபைல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
தப்பிய செந்தில்குமார், கோவை மாநகராட்சியின், 30வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சரண்யாவின் கணவர். இவர்களிடமிருந்து, 6,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.