/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிதி ஒதுக்கி இரண்டு வருஷம் ஆச்சுவளர்ச்சிப் பணி நடக்கவில்லை; கவுன்சிலர்கள் சரமாரி புகார்
/
நிதி ஒதுக்கி இரண்டு வருஷம் ஆச்சுவளர்ச்சிப் பணி நடக்கவில்லை; கவுன்சிலர்கள் சரமாரி புகார்
நிதி ஒதுக்கி இரண்டு வருஷம் ஆச்சுவளர்ச்சிப் பணி நடக்கவில்லை; கவுன்சிலர்கள் சரமாரி புகார்
நிதி ஒதுக்கி இரண்டு வருஷம் ஆச்சுவளர்ச்சிப் பணி நடக்கவில்லை; கவுன்சிலர்கள் சரமாரி புகார்
ADDED : டிச 31, 2024 07:59 AM

அன்னுார் : 'நிதி ஒதுக்கி, இரண்டு ஆண்டுகளாகியும் வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தவில்லை,' என பேரூராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
அன்னுார் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் விஜயகுமார், செயல் அலுவலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 19 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. தற்போது உள்ள வார சந்தையில் கோழி மற்றும் ஆடுகள் விற்க போதுமான இடம் இல்லாததால் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பெரிய அம்மன், சின்ன அம்மன் கோவில் அருகில் உள்ள நிலத்தில் இரண்டு ஏக்கரை மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெறுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கவுன்சிலர் ரங்கராஜ் (தி.மு.க.,) பேசுகையில், முதல் வார்டில் அமைக்கப்பட்ட 'லே அவுட்'டில் கழிவுநீர் வடிகால் இல்லை, தார்சாலை இல்லை. எனவே அங்கீகாரம் வழங்கக் கூடாது,'' என எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அந்த தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது.
கவுன்சிலர் பிரவீணா (தி.மு.க.,) பேசுகையில்,நிதி ஒதுக்கி இரண்டு ஆண்டுகள் ஆகியும் பணிகள் முடிக்கவில்லை. இளநிலை பொறியாளர் சந்திர போஸ் காந்தி எந்தப் பணியையும் ஆய்வு செய்வதில்லை. ஒப்பந்ததாரர்களை விரைவில் முடிக்கும்படி அறிவுறுத்துவதில்லை. இதனால் வார்டு மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை, என்றார்.
கவுன்சிலர் கார்த்திகேயன் (த.மா.கா.,) பேசுகையில், ரேஷன் கடை கட்டி முடித்து பேரூராட்சியிடம் ஒப்படைத்து ஓர் ஆண்டு ஆகிவிட்டது.
இன்னும் ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்கவில்லை. பொறியாளர் துறை மெத்தனமாக உள்ளது. கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என்றார்.
கவுன்சிலர் அங்காத்தாள் (பா.ஜ.,) பேசுகையில், ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்த வேண்டும். இரண்டரை மாதத்துக்கு ஒரு முறை தான் கூட்டம் நடத்துகின்றனர். எப்படி குறைகளை சொல்வது, என்றார்.
கவுன்சிலர் ரேஸ்மி பேசுகையில், தெரு நாய்கள் மற்றும் குரங்குகள் அதிக அளவில் உள்ளன. குழந்தைகளை துரத்துகின்றன. நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும். குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும், என்றார்.
தலைவர் பரமேஸ்வரன் பேசுகையில், பணி தாமதமாக செய்யும் ஒப்பந்ததாரர்களை கருப்பு பட்டியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பணிகளை வேகமாக ஆய்வு செய்து முடிக்க பொறியாளர் துறைக்கு அறிவுறுத்தப்படும், என்றார்.