/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'எப்போதுதான் முடியும் குடிநீர் திட்ட பணிகள்' ஆய்வுக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் 'காட்டம்'
/
'எப்போதுதான் முடியும் குடிநீர் திட்ட பணிகள்' ஆய்வுக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் 'காட்டம்'
'எப்போதுதான் முடியும் குடிநீர் திட்ட பணிகள்' ஆய்வுக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் 'காட்டம்'
'எப்போதுதான் முடியும் குடிநீர் திட்ட பணிகள்' ஆய்வுக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் 'காட்டம்'
ADDED : மே 22, 2025 11:38 PM
கோவை : மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பணிகள் முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கோவைஎம்.பி., ராஜ்குமார் தலைமையிலும், மேயர் ரங்கநாயகி முன்னிலையிலும் நடந்தது.
அப்போது, கவுன்சிலர் சித்ரா (26வது வார்டு) பேசுகையில், ''சூயஸ் குடிநீர் குழாய் இணைப்பு பணிகளால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மழைநீர் வடிகால்கள், பாதைகளின் சுவர்கள் உடைக்கப்பட்டுள்ளன. எனவே, குடிநீர் குழாய் பதிக்கும் நிறுவனத்தை வைத்து புதிதாக கல்வெட்டு, மழைநீர் வடிகால்களை கட்டிக்கொடுக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்ட பணிகள் செங்காளியப்பன் நகரில் முடியவில்லை. பணி செய்த இடங்களில் 'பேட்ச் ஒர்க்' செய்யாததால் தினமும் வாகன ஓட்டிகள் பலர் கீழே விழுந்து எழும் நிலை உள்ளது,'' என்றார்.
ராதாகிருஷ்ணன்(18): நல்லாம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் பாதாள சாக்கடை இணைப்புகள் முறையாக வழங்கப்படாததால் கழிவுநீர் வெளியேறி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அவற்றை சுத்தம் செய்யும் வாகனமும் இல்லை.
எனவே, புதிய இணைப்புகள் வழங்காமல், ஏற்கனவே வழங்கப்பட்ட இணைப்புகளை எந்தவித குறையுமின்றி முழுமையாக முடிக்க வேண்டும்.
சிவா(11): அம்ரூத் பணிக ளுக்காக ரோடுகள் தோண்டப்படுகின்றன. தோண்டப்பட்ட இடங்களில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
அவ்வாறு முடிக்கப்பட்ட சில இடங்களிலும் தண்ணீர் கசிவு ஏற்படுவதால் மீண்டும் ரோட்டை தோண்ட வேண்டியுள்ளது. இதனால் புதிதாக போடப்பட்ட ரோடு மோசமாவதுடன், மக்களும் அவதிப்படுகின்றனர்.
சுமதி(13): பாதாள சாக்கடை திட்ட பணிகளை முடிப்பதற்காக காத்திருக்க வேண்டியுள்ளது. ரோடுகள் பல மோசமாக இருந்தும், இப்பணிகளை முடித்தால் மட்டுமே, புதிதாக ரோடு போடமுடியும், எனவே, பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
குடிநீர் திட்ட பணிகளில் நிலவும் இழுபறியால் மக்கள் கடும் அவதிக்குள்ளாவதாக கவுன்சிலர்கள் கொந்தளித்தனர்.
இதையடுத்து, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.