/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாசாணியம்மன் கோவிலில் காணிக்கை எண்ணிக்கை
/
மாசாணியம்மன் கோவிலில் காணிக்கை எண்ணிக்கை
ADDED : அக் 30, 2025 11:05 PM

ஆனைமலை:  ஆனைமலை மாசாணியம்மன் கோவில் தட்டு காணிக்கை உண்டியலில், 22 லட்சத்து, நான்காயிரத்து, 224 ரூபாய் இருந்தது.
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவு வந்து செல்கின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதில், தட்டு காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடந்தது. அதில், சலவநாயக்கன்பட்டி ஊர் பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
தட்டு காணிக்கை உண்டியலில், 22 லட்சத்து, நான்காயிரத்து, 224 ரூபாய் இருந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, ஈச்சனாரி விநாயகர் கோவில் உதவி ஆணையர் ரத்தினாம்பாள், மாசாணி அம்மன் கோவில் உதவி ஆணையர் முத்துராமலிங்கம், தக்கார் பிரதிநிதி, சரக ஆய்வர் சித்ரா பங்கேற்றனர்.

