
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்முறை:
கோவக்காய் வறுவல் செய்ய முதலில் ஒரு மசாலா துாள் அரைக்க வேண்டும். ஒரு கடாயில் துருவிய தேங்காய், காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
தேங்காயை வறுத்த பின் சிறிது நேரம் ஆறவிட்டு மிக்சியில் சேர்த்து இதனுடன் பூண்டு, பொட்டுக்கடலை சேர்த்து துாளாக அரைக்கவும்.
அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின், இதில் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், காய்ந்த சிவப்பு மிளகாய், பெருங்காயத்துாள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கொள்ளவும்.
கடுகு பொரிந்தவுடன் மெலிதாக நறுக்கிய கோவைக்காயை உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். கோவக்காய் வதங்கியவுடன் இதில் மஞ்சள் துாள், மிளகாய் துாள், மல்லித்துாள் மற்றும் அரைத்த மசாலா துாள் சேர்த்து நன்கு கலக்கவும்.
இறுதியாக வறுத்த வேர்க்கடலை சேர்த்து கோவக்காய் வறுவலை பரிமாறலாம்.