/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வக்கீல் கொலை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு
/
வக்கீல் கொலை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு
ADDED : ஜூன் 16, 2025 09:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; வக்கீல் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை கண்டித்து, கோவையில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில், வக்கீல் சங்க முன்னாள் தலைவர் சக்கரவர்த்தி துப்பாக்கியால் சுட்டுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், வக்கீல்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தியும், கோவையில் நேற்று வக்கீல்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல், புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை நடைபெறவில்லை. அனைத்து வழக்குகளும் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. 3,500 க்கும் மேற்பட்ட வக்கீல்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.