/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உரிமம் பெறாத வியாபாரிகளுக்கு கோர்ட்டில் அபராதம் விதிப்பு
/
உரிமம் பெறாத வியாபாரிகளுக்கு கோர்ட்டில் அபராதம் விதிப்பு
உரிமம் பெறாத வியாபாரிகளுக்கு கோர்ட்டில் அபராதம் விதிப்பு
உரிமம் பெறாத வியாபாரிகளுக்கு கோர்ட்டில் அபராதம் விதிப்பு
ADDED : ஏப் 21, 2025 05:33 AM
நெகமம் : கோவை விற்பனை குழுவில் உரிமம் பெறாமல், கொப்பரை வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கு, பொள்ளாச்சி கோர்ட் அபராதம் விதித்துள்ளது.
கோவை விற்பனை குழுவின் சட்ட விதிகளை பின்பற்றாமலும், உரிமம் பெறாமலும், 18 வியாபாரிகள், நெகமம் சுற்று வட்டாரத்தில் கொப்பரை வியாபாரம் செய்து வந்தனர். இதை தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு, நெகமம் விற்பனை கூட கண்காணிப்பாளரால், பொள்ளாச்சி ஜே.எம்., எண் 2 கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆறு ஆண்டுகளாக நடந்த வழக்கில், தீர்ப்பு கூறப்பட்டது.
இதில், உரிமம் பெறாமல் வியாபாரம் செய்த குற்றத்திற்காக, வியாபாரிகளுக்கு இணக்க கட்டணமாக, தலா 5 ஆயிரம் மற்றும் கோர்ட் அபராதமாக, 1,500 ரூபாய் செலுத்துமாறு மாஜிஸ்திரேட் பிரகாசம் உத்தரவிட்டார். அரசு தரப்பில், அரசு உதவி வழக்கறிஞர் பகவத்சிங் ஆஜரானார்.