/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குத்தகைக்கு விட்ட கோவில் இடத்தில் அத்துமீறல் கட்டடத்தை இடிக்க கோர்ட் உத்தரவு
/
குத்தகைக்கு விட்ட கோவில் இடத்தில் அத்துமீறல் கட்டடத்தை இடிக்க கோர்ட் உத்தரவு
குத்தகைக்கு விட்ட கோவில் இடத்தில் அத்துமீறல் கட்டடத்தை இடிக்க கோர்ட் உத்தரவு
குத்தகைக்கு விட்ட கோவில் இடத்தில் அத்துமீறல் கட்டடத்தை இடிக்க கோர்ட் உத்தரவு
ADDED : ஆக 01, 2025 09:26 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, தேர்நிலையம் அருகே சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனத்துக்காக வழங்கப்பட்ட இடம், ஹிந்துசமய அறநிலையத்துறை வாயிலாக அளவீடு செய்யப்பட்டு குத்தகைக்கு விடப்பட்டது.
குத்தகைக்கு எடுத்த நபர், ஆளுங்கட்சி ஆதரவுடன் அங்கு நிரந்தர கட்டடம் கட்டி கடைகளை உள் வாடகைக்கு விட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது.முறையாக அனுமதி பெறாமல் கட்டடம் கட்டப்பட்டு செயல்படுகிறது என புகார் கிளம்பியது.
இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், நகராட்சி, ஹிந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேள்வி கேட்டதற்கு முறையாக பதில் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த பிரச்னை குறித்து வழக்கு தொடரப்பட்டது.
கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா கூறியதாவது:
கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஆளுங்கட்சியை சேர்ந்த சிலர், நிரந்தர கட்டடம் கட்டி உள்வாடகைக்கு விட்டுள்ளனர். கட்டடம் கட்டி கடை நடத்த நகராட்சியிடம் அனுமதி பெறவில்லை. ஹிந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும் முறையான பதில் தரவில்லை.
அ.தி.மு.க., நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் ஆலோசித்து, கட்சி பிரமுகர் சூரியநாராயணன் என்பவர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடித்து அகற்ற, ஹிந்துசமய அறநிலையத்துறைக்கு எட்டு வார கால அவகாசம் வழங்கியுள்ளார்.
இவ்வாறு, கூறினார்.
எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், நிருபர்களிடம் கூறுகையில், ''தேர்நிலையம் அருகே சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில், நகராட்சி அனுமதி பெறாமல் கட்டடம் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இது குறித்து வழக்கு தொடரப்பட்டதால் இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நகராட்சி முறையாக அனுமதி வழங்காத நிலையில், மின் இணைப்பு எவ்வாறு வழங்கப்பட்டது என தெரியவில்லை. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.