ADDED : ஆக 27, 2025 01:06 AM
போத்தனுார்; மதுக்கரை மார்க்கெட் பகுதியில், குற்றவியல் மற்றும் உரிமையியல் மாஜிஸ்திரேட் கோர்ட் தலைமை எழுத்தர் ஷர்மிளாவின் அறை பீரோவில் உள்ள 'சிடி' பைல், எல்.இ.டி., 'டிவி' ஆகியவை கலைந்த நிலையில் இருந்தன. மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் தென்காசி, எடைக்கல், முப்பிடாதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலா (எ) பால்தினகரன் 35, என தெரிந்தது. மதுக்கரை கோர்ட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார், திருட்டு வழக்கு பதிவு செய்தனர். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
பால் தினகரன், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டதும், மதுக்கரை கோர்ட்டில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதும், சிறையில் இருந்து வெளியே வந்த அவர், தனக்கு தண்டனை கொடுத்த கோர்ட்டை பழிவாங்கும் எண்ணத்தில், ஆவணங்களை திருடிச்சென்றதும் தெரியவந்தது.

