/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோட்டூர் குறுமைய அளவில் தடகளப்போட்டி; பழனியம்மாள் பள்ளி சாம்பியன்
/
கோட்டூர் குறுமைய அளவில் தடகளப்போட்டி; பழனியம்மாள் பள்ளி சாம்பியன்
கோட்டூர் குறுமைய அளவில் தடகளப்போட்டி; பழனியம்மாள் பள்ளி சாம்பியன்
கோட்டூர் குறுமைய அளவில் தடகளப்போட்டி; பழனியம்மாள் பள்ளி சாம்பியன்
ADDED : செப் 22, 2024 11:52 PM

பொள்ளாச்சி: கோட்டூர் குறுமைய அளவிலான தடகளப் போட்டியில், அதிக புள்ளிகள் பெற்ற காளியாபுரம் பழனியம்மாள் மேல்நிலைப் பள்ளி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
கோட்டூர் குறுமைய அளவிலான தடகளப் போட்டி, காளியாபுரம் பழனியம்மாள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், 30 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
அதில், பழனியம்மாள் பள்ளி மாணவ, மாணவியர் அதிக இடங்களில் வென்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.
அதன்படி, மாணவியர், 14 வயது பிரிவில், 600 மீ., 400 மீ., 200 மீ., ஓட்டத்தில் சமீனா முதலிடம் வென்றார். தவிர, ஜனக பிரியா, 600 மீ., ஓட்டத்தில் இரண்டாமிடம்; 400 மீ., ஓட்டத்தில் மூன்றாமிடம். கவிதன்யா, 100 மீ., ஓட்டத்தில் முதலிடம்.
17 வயது பிரிவில், ரமிதா, 3,000 மீ., 1,500 மீ., மற்றும் 800 மீ., ஓட்டத்தில் முதலிடம். ஜெய்ஸ்ரீ 400 மீ., மும்முறை தாண்டுதலில் இரண்டாமிடம். கேசவிக்கா, 200 மீ., 400 மீ., ஓட்டத்தில் இரண்டாமிடம்.
ஸ்ரீநிதி ஈட்டி எறிதலில் இரண்டாமிடம்; குண்டு எறிதலில் மூன்றாமிடம் பிடித்தார். மித்ரா 1,500 மீ., 800 மீ., ஓட்டத்தில் மூன்றாமிடம். தீபிகா ஜாஸ்மின், 200 மீ., மும்முறை தாண்டுதலில் மூன்றாமிடம் பிடித்தார்.
19 வயது பிரிவில், ரஞ்சிதா 3,000 மீ., 1,500 மீ., 800 மீ., ஓட்டத்தில் முதலிடம், நிவேதா 3,000 மீ., 1,500 மீ., ஓட்டத்தில் இரண்டாமிடம், 800 மீ., ஓட்டத்தில் மூன்றாமிடம் வென்றார்.
பூமிகா ஈட்டி ஏறிதல் மற்றும் மும்முறை தாண்டுதலில் இரண்டாமிடம், ரச்சனா மும்முறை தாண்டுதல், 400 மீ., ஓட்டத்தில் மூன்றாமிடம், பிரஷிதா 400 மீ., தடை தாண்டுதலில் இரண்டாமிடம், 100 மீ., தடை தாண்டுதலில் மூன்றாமிடம் பிடித்தார். இதேபோல, ஜனனி வட்டு எறிதலில் மூன்றாமிடம், மேகவர்தனா ஈட்டி எறிதலில் மூன்றாமிடம், மதுமித்ரா 400 மீ., தடை தாண்டுதலில் மூன்றாமிடம் பிடித்தார்.
* மாணவர், 14 வயது பிரிவில், ரித்திக், 100 மீ., 200 மீ., ஓட்டத்தில் முதலிடம், ஸ்ரீகாந்த் 600 மீ., ஓட்டத்தில் இரண்டாமிடம், 17 வயது பிரிவில், தரணிதரன் ஈட்டி எறிதல், மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதலில் முதலிடம்; மோகன்பிரசாத் 200 மீ., ஓட்டத்தில் இரண்டாமிடம், உயரம் தாண்டுதலில் மூன்றாமிடம், திகந்த் 100 மீ., தடை தாண்டுதலில் இரண்டாமிடம், 400 மீ., தடை தாண்டுதலில் மூன்றாமிடம், 400 மீ., தடை தாண்டுதலில் இரண்டாமிடம், 100 மீ., ஓட்டத்தில் மூன்றாமிடம் பிடித்தனர்.
அதிக புள்ளிகள் பெற்று, இப்பள்ளி மாணவ, மாணவியர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றனர். இவர்களை, பள்ளிச் செயலாளர் சிவகுமார், இணைச் செயலாளர் நரேந்திரகுமார், தலைமையாசிரியர் சேதுராமன், உடற்கல்வி ஆசிரியர்கள் தர்மலிங்கம், அய்யப்பன் உட்பட பலரும் வாழ்த்தினர்.