தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ யானைப்பசிக்கு சோளப்பொரி!:பால் கொள்முதல் விலை உயர்விலும் ஏமாற்றம் ; மறு பரிசீலனை செய்ய அரசுக்கு கோரிக்கை

யானைப்பசிக்கு சோளப்பொரி!:பால் கொள்முதல் விலை உயர்விலும் ஏமாற்றம் ; மறு பரிசீலனை செய்ய அரசுக்கு கோரிக்கை

யானைப்பசிக்கு சோளப்பொரி!:பால் கொள்முதல் விலை உயர்விலும் ஏமாற்றம் ; மறு பரிசீலனை செய்ய அரசுக்கு கோரிக்கை


UPDATED : ஆக 24, 2026 04:14 AM

ADDED : ஆக 23, 2026 05:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 24, 2026 04:14 AM ADDED : ஆக 23, 2026 05:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: 'தமிழக அரசு, ஒரு லிட்டர் பால் கொள்முதல் விலை, ரூ.41 ஆக உயர்த்தி வெளியிட்ட அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. தனியார் நிறுவனத்துக்கு, அதிகளவில் பால் வழங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது' என, விவசாயிகள் தெரிவித்தனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக, கால்நடை வளர்ப்பை உப தொழிலாக, விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவின் நிறுவனத்துக்கு உட்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு ஊற்றி வருகின்றனர். பாலில் உள்ள கொழுப்பு சத்து அடிப்படையில் விலை வழங்கப்படுகிறது. ஆவின் நிறுவனம் பாலுக்கு மிகக்குறைந்த விலை கொடுப்பதால், பல விவசாயிகள், தனியார் நிறுவனங்களுக்கு பால் ஊற்றி வருகின்றனர். தமிழக அரசு ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலையாக, 41 ரூபாய் என அறிவித்துள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவு சங்கத்துக்கு பால் ஊற்றும் விவசாயிகள் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள், ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கி வருகின்றனர். மூன்று ஆண்டுகளாக, தமிழக அரசு பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தவில்லை. தீவனங்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், விவசாயிகள் ஊற்றும் பாலுக்கு, கொழுப்பு சத்து அடிப்படையில் ஆவின் நிறுவனம், லிட்டருக்கு குறைந்தபட்சம், 28.50 ரூபாயும், அதிகபட்சம், 35 ரூபாயும் வழங்குகிறது. மாடுகளுக்கு வழங்கப்படும் தீவனங்களின் விலை உயர்ந்துள்ளதால், ஆவின் நிறுவனம் வழங்கும் விலை கட்டுப்படியாவதில்லை.

அதே நேரம், தனியார் கம்பெனிகள், கொள்முதல் செய்யும் ஒரு லிட்டர் பாலுக்கு, கொழுப்பு சத்து அடிப்படையில், குறைந்த பட்சம், 38 ரூபாயும், அதிகபட்சம், 52 ரூபாய் வரை விலை கொடுக்கிறது. அதனால், ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கி வந்த விவசாயிகள் பலர், தனியார் நிறுவனத்தை நாட துவங்கியுள்ளனர். கொள்முதல் செய்யும் பாலுக்கு, ஆவின் நிறுவனம் விலை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தோம்.

தமிழக அரசு, ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலையாக, 41 ரூபாய் என அறிவித்துள்ளது. பழைய விலையில் இருந்து லிட்டருக்கு ஒரு ரூபாயும், ஊக்கத் தொகையாக இரண்டு ரூபாயும் என மூன்று ரூபாய் உயர்த்தி உள்ளது. இந்த விலை, விவசாயிகளுக்கு கட்டுபடியாகாது. எனவே, தமிழக அரசின் பால் விலை உயர்வு அறிவிப்பு, விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. பால் விலை உயர்வை, தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

கூடுதலாக விலை கொடுத்தால்...


தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க கோவை மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது: தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள், ஆவினை விட, கூடுதலாக விலை தருகிறது. இதனால் ஆவினுக்கு பால் கொள்முதல் குறைந்துள்ளது. கோவை மாவட்டத்தில், 353 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் தினமும் காலை மற்றும் மாலையில் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன் வரை தினமும் கோவை மாவட்டத்தில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது, ஒரு லட்சத்து 10 ஆயிரமாக குறைந்து விட்டது. மாநில அளவில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன், 35 லட்சம் லிட்டர் பால் தினமும் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது, 25 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் ஆகிறது. ஆவின் நிர்வாகம் அதிக விலை கொடுத்து, கர்நாடக உட்பட பிற மாநிலங்களில் இருந்து பால் மற்றும் பால் பொருட்களை கொள்முதல் செய்கிறது.
அதற்கு பதில் தமிழகத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதலாக விலை கொடுத்தால், இங்கே தேவையான அளவு பால் கிடைத்துவிடும். இவ்வாறு, அவர் கூறினார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் கூறியதாவது: பருத்தி, புண்ணாக்கு, தவிடு, மாட்டுத்தீவனம், வைக்கோல் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. விவசாய தொழிலாளியின் சம்பளமும் அதிகரித்து விட்டது.
அரசு அறிவித்த ஒரு லிட்டர் பாலுக்கு, 41 ரூபாய் என்பது கட்டுபடியாகாது. தீவன விலையையும், கூலியையும் கணக்கிட்டால், ஒரு லிட்டர் பாலுக்கான உற்பத்தி விலை 70 ரூபாய் ஆகிறது. அரசு ஒரு லிட்டர் பசும்பாலுக்கு, 75 ரூபாய் கொள் முதல் விலை நிர்ணயிக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில், ஒரு லிட்டருக்கு 50 ரூபாயும், மத்தியப்பிரதேசத்தில் 62 ரூபாயும், பஞ்சாபில் 65 ரூபாயும் விலை தரப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us