/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாசாணியம்மன் கோவிலில் குழந்தைகளுக்கு பசும்பால்
/
மாசாணியம்மன் கோவிலில் குழந்தைகளுக்கு பசும்பால்
ADDED : ஜூன் 03, 2025 12:35 AM
ஆனைமலை; ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பசும்பால் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.
தமிழக சட்டசபையில், சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பசும்பால் தினமும் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் இத்திட்டம் நேற்று துவங்கப்பட்டது. பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, திட்டத்தை துவக்கி வைத்தார். கோவிலுக்கு வந்த, பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு பசும்பால் வழங்கப்பட்டது. ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி, மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் முத்துராமலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.