/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்ற இ.ம.க., கோரிக்கை
/
சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்ற இ.ம.க., கோரிக்கை
ADDED : மே 27, 2025 10:26 PM
கோவை : செல்வபுரம் ராமமூர்த்தி சாலையின், இரு பக்கங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று, இ.ம.க., மாநகராட்சி கமிஷனரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
செல்வபுரம் ராமமூர்த்தி சாலை, சிறுவாணி சாலையையும், சொக்கம்புதுார் மற்றும் முத்தண்ணன் குளக்கரை சாலையை இணைக்கும் பிரதான இணைப்பு சாலையாகும். அதோடு எஸ்.பி.ஓ.,ஏ., பள்ளி, சவுடேஸ்வரி வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாகும்.
செல்வபுரம் கல்லாமேடு சாலை, சமீபத்தில் விரிவுபடுத்தப்பட்டு தார்சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து வசதி செய்யப்பட்டது. இச்சாலையும் ராமமூர்த்தி சாலையும் சிறுவாணி சாலையோடு நேர் எதிர் திசையில் இணைகின்றன.
கல்லாமேடு சாலையின் தெற்கு பகுதி புட்டுவிக்கி வழியாக குனியமுத்துார் அணைக்கட்டு, பேரூர் பெரியகுளம், சுண்டக்காமுத்துார், கோவைப்புதுாரை அடைந்து அங்கிருந்து, பாலக்காடு சாலையை அடையலாம்.
அதனால் செல்வபுரம் ராமமூர்த்தி சாலையின் இருபக்கங்களிலும், சாலையை மறித்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளை அப்புறப்படுத்தி, சாலையை விரிவாக்கம் செய்ய, மாநகராட்சி கமிஷனரிடம் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் சூர்யா மனு அளித்தார்.