தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நண்டு கிரேவி

 நண்டு கிரேவி

 நண்டு கிரேவி


ADDED : மார் 01, 2026 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 06:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செய்முறை : முதலில், அடுப்பில் கடாய் வைத்து அதில், ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய தக்காளியைப் போட்டு லேசாக வதக்கிக் கொள்ள வேண்டும். வதக்கியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். கடலைப் பருப்பையும் லேசான சூட்டில் மொறுமொறுப்பாக வறுத்து எடுத்து, துருவியத் தேங்காயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும். அதில் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.

பின்னர், தாளித்த பாத்திரத்தில் சுத்தம் செய்த நண்டு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள், அரைத்து வைத்துள்ள தக்காளி வெங்காயம் விழுது மற்றும் நண்டு ஆகியவற்றை போட்டு அனைத்தும் நனையும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும்.

நண்டு வெந்ததும் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் தேங்காய் விழுது சேர்த்து மீண்டும் இரண்டு நிமிடம் வேகவைத்து இறக்கி, கொத்தமல்லி தலைகள் தூவினால் சுவையான செட்டிநாடு நண்டு குழம்பு ரெடி!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us