/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராப்ட்ஸ் கவுன்சில் கைவினை கண்காட்சி
/
கிராப்ட்ஸ் கவுன்சில் கைவினை கண்காட்சி
ADDED : ஜன 13, 2025 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கிராப்ட்ஸ் கவுன்சில் ஆப் தமிழ்நாடு சார்பில், 'சாரங் 2025' என்ற கோடை கால கைவினை பொருட்கள் கண்காட்சி இரண்டு நாட்கள் நடந்தன.
அவிநாசி ரோடு, லட்சுமி மில்ஸ் ஊரக மையத்தில், நெசவாளர்கள், கைவினை பொருள் செய்வோர், கலைஞர்கள், வடிவமைப்பாளர்களிடமிருந்து நேரிடையாக பெறப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
ஆண், பெண் மற்றும் குழந்தைகளுக்கான ஆயுத்த ஆடைகள், அணிகலன்கள், அலங்கார பொருட்கள், தோட்ட அலங்காரங்கள், செராமிக் பொருட்கள் என 30க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றிருந்தன.
பொதுமக்கள் ஆர்வமுடன் ஆடை, அணிகலன்களை வாங்கிச் சென்றனர்.