/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கிரெடாய்' அமைப்பு நிர்வாகிகள் பொறுப்பேற்பு
/
'கிரெடாய்' அமைப்பு நிர்வாகிகள் பொறுப்பேற்பு
ADDED : ஏப் 23, 2025 06:40 AM

கோவை; இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) கோவை கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில், 'அரிமா கன்ஸ்ட்ரக்சன்ஸ்' நிறுவன நிர்வாக இயக்குநர் அரவிந்த்குமார் தலைவராக பொறுப்பேற்றார்.
துணை தலைவராக, ஸ்ரீ வத்ஸா ரியல் எஸ்டேட் இணை நிர்வாக இயக்குநர் ராஜிவ் ராமசாமி, செயலாளராக டி.என்.சி.டி. எல்.எல்.பி., நிறுவன நிர்வாக பங்குதாரர் சஞ்சனா விஜயகுமார், இணை செயலாளராக, ஸ்ரீவாரி இன்பிராஸ்ட்ரக்சர் நிறுவன நிர்வாக இயக்குனர் மதன் லுந்த், பொருளாளராக அனன்யா ஷெல்டர்ஸ் நிறுவன செயல் இயக்குர் கார்த்திக் குமார் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
பதவியேற்பு நிகழ்வில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பேசுகையில், “சென்னைக்கு நிகராக, கோவையில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது.
அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் முதன்மையான நகராக கோவை மாறும். 'கிரெடாய்', தனியார்-பொதுத்துறை பங்களிப்புக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது” என்றார்.
'கிரெடாய்' தலைவர் அரவிந்த்குமார் பேசுகையில், “கோவையின் நலனைக் கருத்தில் கொண்டு, 'கிரெடாய்' செயல்படுகிறது. கோவை மாஸ்டர் பிளான் திட்டத்துக்கு தீர்வுகளை வழங்கியும், கட்டுமானத் துறையின் சவால்களை சிறப்பாக எதிர்கொண்டும் வருகிறது,” என்றார்.
செயலாளர் சஞ்சனா விஜயகுமார் பேசுகையில், “கோவை கிரெடாயுடன் மதுரை, சேலம், ஓசூர், நெல்லை கிளைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்,” என்றார்.
நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர் குகன் இளங்கோ, நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

