/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிரெடாய் 'பேர் புரோ' கண்காட்சி கொடிசியாவில் இன்று துவக்கம்
/
கிரெடாய் 'பேர் புரோ' கண்காட்சி கொடிசியாவில் இன்று துவக்கம்
கிரெடாய் 'பேர் புரோ' கண்காட்சி கொடிசியாவில் இன்று துவக்கம்
கிரெடாய் 'பேர் புரோ' கண்காட்சி கொடிசியாவில் இன்று துவக்கம்
ADDED : ஆக 07, 2025 10:45 PM
கோவை; கோவை 'கிரெடாய்' அமைப்பு சார்பில் 'பேர் புரோ-2025' எனும் வீடு வாங்குவோர், கட்டுவோருக்கான கண்காட்சி கொடிசியா-இ ஹாலில் இன்று துவங்குகிறது; வரும், 10ல் நிறைவடைகிறது.
தினமும் காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கும் இக்கண்காட்சியில், 30க்கும் மேற்பட்ட முன்னணி டெவலப்பர்களின் ஸ்டால்கள் இடம்பெறுகின்றன. இதில், 100க்கும் மேற்பட்ட கட்டுமானத் திட்டங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
தவிர, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, சவுத் இந்தியன் வங்கி, பாங்க் ஆப் பரோடா, எச்.டி.எப்.சி., வங்கி, எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் போன்ற முன்னணி வங்கிகள், மக்களுக்கு தேவையான வீட்டுவசதி கடனை வழங்க உள்ளன.
அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்கள், மூத்த குடிமக்களுக்கான குடியிருப்புகள், பிளாட்கள் மற்றும் கேட்டெட் கம்யூனிட்டிகள் உள்ளிட்டவை குறித்த திட்டங்கள், தகவல்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
கண்காட்சியில் டெவலப்பர்கள் சிறப்பு சலுகைகளும் வழங்குகின்றனர். கோவை ரியல் எஸ்டேட் சந்தை தொடர்பான ஆய்வு அறிக்கையும் வெளியிடப்படவுள்ளது.
தொடர்ந்து, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் நகர வளர்ச்சி குறித்து நிபுணர்களின் கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.