/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களுக்கான கிரிக்கெட்;வென்றது சி.எஸ்., அகாடமி
/
மாணவர்களுக்கான கிரிக்கெட்;வென்றது சி.எஸ்., அகாடமி
ADDED : மார் 01, 2024 12:41 AM

கோவை;பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ராமகிருஷ்ணா பள்ளியை வீழ்த்தி சி.எஸ்., அகாடமி அணி கோப்பையை வென்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி 12 வயதுக்கு உட்பட்டோருக்கு 'ஏ.வி., லட்சுமணன் செட்டியார் கோப்பை'க்காக நடந்தன.
இதன் இறுதிப்போட்டி பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் ராமகிருஷ்ணா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.எஸ்., அகாடமி பள்ளி அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ராமகிருஷ்ணா அணி 20 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அணிக்காக சஞ்சீவ் ஆதித்யா (45) பொறுப்பாக விளையாடினார். சி.எஸ்., அகாடமி அணியின் கிஷான் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய சி.எஸ்., அகாடமி அணிக்கு விவான் நரேனின் (71*) அசத்தல் ஆட்டம் கைகொடுத்தது. 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழந்து 108 ரன்கள் எடுத்து சி.எஸ்., அகாடமி அணி கோப்பையை வென்றது.

