/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேபாளத்தில் கிரிக்கெட்: காரமடை வீரர் தேர்வு
/
நேபாளத்தில் கிரிக்கெட்: காரமடை வீரர் தேர்வு
ADDED : மார் 20, 2024 10:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : நேபாளத்தில் நடக்கும் ஆசிய அளவிலான, ரெட் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டிக்கு, காரமடையை சேர்ந்த வீரர் தேர்வு செய்யப்பட்டுள் ளார்.
நேபாள் ரெட் டென்னிஸ் பால் கிரிக்கெட் சங்கம், பொக்காரா கிரிக்கெட் அகாடமி சார்பில், 3வது தெற்காசிய கோப்பைக்கான ரெட் டென்னிஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி, வரும் 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை, பொக்காராவில் உள்ள ரங்கசாலா ஸ்டேடியத்தில் நடக்கிறது.
இதில் இந்தியா, இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில், காரமடையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நவீன் ராஜ் இடம் பிடித்துள்ளார்.

