/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிரிக்கெட், சாப்பாடு போன்றது வாழ்க்கை; சென்னை ஐகோர்ட் நீதிபதி பேச்சு
/
கிரிக்கெட், சாப்பாடு போன்றது வாழ்க்கை; சென்னை ஐகோர்ட் நீதிபதி பேச்சு
கிரிக்கெட், சாப்பாடு போன்றது வாழ்க்கை; சென்னை ஐகோர்ட் நீதிபதி பேச்சு
கிரிக்கெட், சாப்பாடு போன்றது வாழ்க்கை; சென்னை ஐகோர்ட் நீதிபதி பேச்சு
ADDED : பிப் 18, 2024 02:21 AM

கோவை;சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சுவாமிகள், துறவறம் பெற்று ஐம்பது ஆண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து, பொன்விழா ஆண்டை சங்கர விஜய திருவிழாவாக கோவையில் கொண்டாடப்படுகிறது.
ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில் திருமணமண்டபத்தில், நேற்று நடந்த விஜயதிருவிழா சொற்பொழிவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி பேசியதாவது:
நாம் செய்யும் தொழில் தர்ம வழியில் இருந்தால்,வாழ்வில் உண்மையானமகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கை என்பது பல்வேறு விருப்ப தேர்வுகளை கொண்டது.
சாப்பிடுவது கூட, விருப்பத்தை அடிப்படையாக கொண்டது. எது நமக்கு தேவையோ, விருப்பமோ அதை சாப்பிடுகிறோம். அதே போல்தான் வாழ்க்கையும்.
நாம் எடுக்கிற விருப்பத்தை பொறுத்தது நம் வாழ்க்கை. 'கர்மா' என்ற ஒன்று இருந்தாலும்நமது பயிற்சி, முயற்சி மற்றும் அறவழி ஆகியவையே, நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது.
கிரிக்கெட்டை, நம் வாழ்க்கையுடன் ஒப்பிடலாம். நம் விருப்பத்தை பொறுத்து டி-20, ஒன் டே, ஐந்து நாள் டெஸ்ட் மேட்சா என்பதை, முடிவு செய்து கொள்ளலாம். எவ்வளவு காலம் 'அவுட்' ஆகாமல் இருக்கிறோம் என்பதே முக்கியம்.
எந்த பந்தை தவிர்க்க வேண்டும், எந்த பந்தை வீசி அடிக்க வேண்டும் என்பது போன்றது தான் வாழ்க்கை.
இவ்வாறு, அவர் பேசினார்.