ADDED : நவ 04, 2024 10:48 PM
கோவை; சி.ஐ.டி., கல்லுாரியில் நடந்த கிரிக்கெட் போட்டியில், கே.ஐ.டி., கல்லுாரி அணி முதல் பரிசை தட்டியது.
கோவை - அவிநாசி ரோடு, சி.ஐ.டி., கல்லுாரியில் இன்ஜி., கல்லுாரிகளுக்கு இடையே அலுவலர்கள், பணியாளர்களுக்கான, 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி நடந்தது.
இதில், எட்டு கல்லுாரி அணிகள் 'நாக் அவுட்' முறையில் விளையாடின.
முதல் அரையிறுதியில், கே.பி.ஆர்., கல்லுாரி அணியும், எஸ்.ஆர்.இ.சி., அணியும் மோதின. முதலில் 'பேட்டிங்' செய்த எஸ்.ஆர்.இ.சி., அணியினர் நான்கு விக்கெட் இழப்புக்கு, 85 ரன் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய கே.பி.ஆர்., கல்லுாரி அணியினர் இரண்டு விக்கெட் இழப்புக்கு, 86 ரன் எடுத்து வெற்றி பெற்றனர்.
இரண்டாம் அரையிறுதியில், சி.ஐ.டி., கல்லுாரியும், கே.ஐ.டி., கல்லுாரி அணியும் விளையாடின. முதலில் 'பேட்டிங்' செய்த சி.ஐ.டி., அணியினர் நான்கு விக்கெட் இழப்புக்கு, 98 ரன் எடுத்தனர். இதையடுத்து விளையாடிய கே.ஐ.டி., கல்லுாரி அணியினர் இரு விக்கெட் இழப்புக்கு, 99 ரன் எடுத்து இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றனர்.
இறுதிப்போட்டியில், கே.பி.ஆர்., மற்றும் கே.ஐ.டி., அணிகள் மோதின. முதலில் 'பேட்டிங்' செய்த கே.ஐ.டி., கல்லுாரி அணி, ஆறு விக்கெட் இழப்புக்கு, 120 ரன் எடுத்தது.
தொடர்ந்து விளையாடிய கே.பி.ஆர்., கல்லுாரி அணியினர் எட்டு விக்கெட் இழப்புக்கு, 10 ஓவர் முடிவில், 103 ரன் எடுத்து தோல்வியை தழுவினர்.
மூன்றாம் இடத்தை எஸ்.ஆர்.இ.சி., அணியும், நான்காம் இடத்தை சி.ஐ.டி., கல்லுாரி அணியும் பிடித்தன. வெற்றி பெற்றவர்களுக்கு சி.ஐ.டி., கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வரி, நிர்வாக அலுவலர் ஜேக்கப் ஆகியோர் பரிசு வழங்கினர்.
உடற்கல்வி இயக்குனர் மணிகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
