/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிரிக்கெட்; ஆறு விக்கெட்கள் வீழ்த்திய வீரர்
/
கிரிக்கெட்; ஆறு விக்கெட்கள் வீழ்த்திய வீரர்
ADDED : ஏப் 24, 2025 11:19 PM

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் இரண்டாவது டிவிஷன் போட்டி, பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., 'சி' மைதானத்தில் நடந்துவருகிறது. இதில், காஸ்மோ விலேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமியும், ஆதித்யா கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.
பேட்டிங் செய்த காஸ்மோ அணியினர், 29.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 109 ரன்கள் எடுத்தனர். வீரர் ராஜேஷ், 44 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர் சைலேந்திரா ஆறு விக்கெட்கள் வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய ஆதித்யா அணியினர், 18.5 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு, 111 ரன்கள் எடுத்தனர். வீரர் ஆதித்யா, 60 ரன்களும், பிரணவ், 39 ரன்களும் எடுத்தனர்.
நான்காவது டிவிஷன் போட்டியில், மிராக்கிள் கிரிக்கெட் கிளப் அணியும், கோயம்புத்துார் பிரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. பேட்டிங் செய்த மிராக்கிள் அணியினர், 44.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 137 ரன்கள் எடுத்தனர்.
வீரர் ராகுல் பிரணவ், 54 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர்கள் ராமிநாதன், வாசிம் அக்ரம் ஆகியோர் தலா நான்கு விக்கெட்கள் வீழ்த்தினர். அடுத்து விளையாடிய, கோயம்புத்துார் பிரெண்ட்ஸ் அணியினர், 42.5 ஓவரில் எட்டு விக்கெட்டுக்கு, 141 ரன்கள் எடுத்தனர். வீரர் ஜெய்சங்கர், 42 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர் ரஞ்சித் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தினார்.

