ADDED : ஜூன் 19, 2026 05:11 AM
ஆட்டோ கவிழ்ந்து பயணி பலி ஒண்டிபுதுார்: பட்டணம் புதுார் சவுந்தரராஜன், ஆட்டோவில் திருச்சி சாலை ஒண்டிபுதுார் நோக்கி பயணம் செய்தார். ஓட்டுநர் பாலாஜி வாகனத்தை வேகமாக இயக்கியதால், கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயமடைந்த சவுந்தரராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து, போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.
போதை பொருள் விற்பனை உக்கடம்: சரவணம்பட்டி மற்றும் சிங்காநல்லுார் போலீசார் ரோந்து பணியின் போது, தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களை பிடித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்படி,போத்தனுார் அப்துல் ஷக்கீம், 48 தனுஷ்குமார், 24 மகாலிங்கம், 33 ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, இவர்கள் யாரிடம் கொள்முதல் செய்தனர் என்பதை விசாரிக்கின்றனர்.
போதை மாத்திரை பதுக்கல் போத்தனுார்: கரும்புக்கடை போலீசாருக்கு நேற்று காலை புட்டுவிக்கி சாலை, ஜலகண்டேஸ்வரர் கோவில் அருகே போதை மாத்திரை விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று கண்காணித்தார். கோவில் அருகேயுள்ள காலியிடத்தில் இருவர் நின்றிருந்தனர். விசாரணையில், அவர்கள் சூலூர், முத்துகவுண்டன்புதுார் சந்தோஷ், 19, மதுக்கரை மார்க்கெட், மேட்டாங்காடு சந்தன்குமார், 26 என தெரிந்தது. இருவரும் போதைக்காக பயன்படுத்தப்படும் 1,442 டெபன்டடால் மாத்திரைகளை வைத்திருந்தது. தெரிந்தது. ராஜஸ்தானில் இருந்து மாத்திரைகளை வாங்கி வந்தது தெரிந்தது. தற்போது சிறையிலிருக்கும் சந்தன்குமாரின் நண்பர் வழிமுறை கூறியது தெரிந்தது.
