ADDED : ஜூன் 19, 2026 05:10 AM

கோவை:மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், பி.எஸ்.ஜி. சுகாதார அறிவியல் கல்வி நிறுவனங்களில் போதை ஒழிப்பு மன்றம் துவங்கப்பட்டது.
போலீஸ் கமிஷனர் கண்ணன் துவக்கி வைத்தார். தொடர்ந்து போதை ஒழிப்பில் மாணவர்களின் பங்களிப்பின் அவசியம், போதைப்பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து பேசினார்.
மன்றத்தின் குழு உறுப்பினர்கள் மற்றும் வீதி நாடக விழிப்புணர்வு குழு உறுப்பினர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். போஸ்டர் தயாரிப்பு, விழிப்புணர்வு படம் போன்ற போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. போதைப்பொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு செயலி பி.எஸ்.ஜி. ஷீல்டு என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
சமூக ஆர்வலர் விஷ்ணுராம், பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் சுப்பாராவ், மகேஷ், ராமநாதன் பங்கேற்றனர்.
