தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்


UPDATED : அக் 06, 2026 11:19 PM

ADDED : அக் 06, 2026 08:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 11:19 PM ADDED : அக் 06, 2026 08:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கஞ்சா விற்ற இருவர் கைது



பீளமேடு: சவுரிபாளையம், ஜி.வி.ரெசிடென்சி சந்திப்பு பகுதியில் பீளமேடு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா விற்பனை செய்த ஈரோடு, ரங்கம்பாளையம் பிரசாந்த்,22, தாராபுரம், நல்லகவுண்டம்பாளையம் சந்தோஷ்,22, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தாயை கத்தியால் குத்திய மகன்



சின்னவேடம்பட்டி முருகன் நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் மனைவி பிரிந்து சென்றார். மோகனராஜ், தாயார் ருக்மணியுடன் ஒரே வீட்டில் வசித்தனர். மோகன்ராஜ் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார். வீட்டில் இருந்த மோகன்ராஜ், திடீரென காய்கறி நறுக்கும் கத்தியால், ருக்மணியை குத்தினார். மயங்கி விழுந்த ருக்மணியை, அருகிலிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

பைக்கில் 'ரீல்ஸ்' ; வாலிபர் கைது



பேரூர் காளம்பாளையம், திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 20. இவர் 27 ம் தேதி இரவு 10 மணிக்கு, அவிநாசி ரோட்டில், ஹோப் காலேஜ் - கோல்ட்வின்ஸ் வரை, தனது பைக்கில் போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாகச் சென்று 'வீலிங்' செய்தார். அதை வீடியோ எடுத்து, இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ்' வெளியிட்டார். பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து ரஞ்சித் குமாரை கைது செய்தனர்.

மனைவிக்கு சுத்தியல் அடி



கரும்புக்கடை: ஆத்துபாலம் அடுத்து கண்ணாம்பு காளவாய் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக். இவரது சகோதரி அசீனா பர்வீன், 37. நேற்று முன்தினம் அசீனா பர்வீன், என்.பி. இட்டேரிக்கு முன் மேம்பாலம் துவங்குமிடத்தில் நின்றிருந்தார். அங்கு வந்த இவரது கணவர் சையது முகமது, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சுத்தியலால் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றார். முகமது ரபீக் புகாரில் குனியமுத்தூர் போலீசார் விசாரித்து, சையது முகமதுவை தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us