தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்


UPDATED : அக் 10, 2026 05:06 AM

ADDED : அக் 10, 2026 12:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 05:06 AM ADDED : அக் 10, 2026 12:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வீட்டில் திருட்டு



வடவள்ளி: மருதமலை சாலை, நவாவூர் பிரிவில் வசிப்பவர் தீபிகா. வெளியூர் சென்று இருந்தபோது, வீட்டில் நாயை கவனிக்க ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார். இவர் கடந்த 7ம் தேதி வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, 40 ஆயிரம் பணம், வெள்ளிப்பொருள் என, 90 ஆயிரம் பொருட்கள் திருடு போய் இருந்தது. புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

பைக் திருட்டு புகார்



ரேஸ்கோர்ஸ்: ரயில்நிலையம், ரயில்வே காலனியில் வசிக்கும் சஞ்சித், செப்., 13ம் தேதி இரவு பைக்கை அலுவலகம் முன் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். 14ம் தேதி காலையில் பார்த்தபோது பைக் திருடு போயிருந்தது. புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.

புகையிலை பொருட்கள் விற்பனை



உக்கடம்: போலீசார் ரோந்து பணியின் போது, புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட அப்துல் ஹக்கீம் என்பவரை கைது செய்தனர்.

சிங்காநல்லுார்: நீலிகோணாம்பாளையத்தில் பெட்டிக்கடை ஒன்றில் போலீசார் சோதனை செய்து, 9.5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். சிங்காநல்லுார் பத்மநாபன், வரதராஜபுரம் யசோதாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

* ரோந்து பணியின் போது, அம்மன் நகர் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பகுதியில் இருவரிடம் போலீசார் விசாரித்து அந்நபரிடம் இருந்த, 10.5 கி.கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அவர் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி, நீலிக்கோணம் பாளையத்தில் வசிக்கும் ராஜஸ்தானை சேர்ந்த ராஜாராம் சவுத்ரி என தெரிந்தது. இரு வரையும் சிங்காநல்லுார் போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா சாக்லேட் பறிமுதல்



ரத்தினபுரி: ரத்தினபுரி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், சாஸ்திரி நகர் சுடுகாடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்களை சோதனை செய்தபோது, ஒரு கிலோ கஞ்சா, 148 கஞ்சா சாக்லேட் மறைத்து வைத்திருந்தது தெரிந்து பறிமுதல் செய்தனர். விசாரணையில், பெங்களூரில் பணிபுரிந்த கோவை அபுபக்கர் சித்திக் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்த போது கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.

இவரது பழக்கம், உறவினர் சர்புதீன், நண்பன் முருகனுக்கும் ஏற்பட்டுள்ளது. மூன்று பேரும் சேர்ந்து ஆந்திரா சித்துார் பகுதியில் கஞ்சா வாங்கிவந்து, கோவையில் கூலி தொழிலாளர்கள், ஐ.டி., பணியாளர்களுக்கும், வடமாநில பணியாளர்களுக்கும் சப்ளை செய்தது தெரியவந்தது. மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us